படம் இன்று ரிலீஸ், ப்ரீ புக்கிங்கில் மட்டுமே சூர்யாவின் கங்குவா செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
கங்குவா
சூர்யாவின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி உள்ள படம் கங்குவா.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் 3டி தொழில் நுட்பத்திலும் வெளியாகிறது. உலகம் முழுவதுமே சுமார் 11,500 திரைகளில் இப்படம் வெளியாக உள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தை மையப்படுத்திய கதை தான் கங்குவா.
ப்ரீ புக்கிங்
இன்று படம் மாஸாக வெளியாகிவிட்டது, சூர்யாவின், இசை, 3டி தொழில்நுட்ப விஷயங்கள் என பல ரசிகர்களால் கவரப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் கையில் ஒரு நல்ல படத்தை படக்குழு கொடுத்துள்ளார்கள், கண்டிப்பாக படம் வெற்றி தான். படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ப்ரீ புக்கிங்கில் படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வந்துள்ளது.
சூர்யாவின் கங்குவா படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 25 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்துள்ளது.

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

பிறந்து 15 நாள் ஆன குழந்தையை ஃப்ரிட்ஜில் வைத்த தாய்.., பின்னால் இருக்கும் அதிர்ச்சி காரணம் News Lankasri
