அட்டகாசமான ப்ரீ புக்கிங் வேட்டையில் சூர்யாவின் கங்குவா... இதுவரை செய்த கலெக்ஷன்
கங்குவா
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா அதிக பட்ஜெட்டில் நடித்துள்ள படம் கங்குவா.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவை அடுத்து திஷா பதானி, பாபி தியோல் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பான் இந்தியா வெளியீடாக வெளியாக இருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார், படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
10,000 ஸ்கிரீன்களுக்கு மேலாக கங்குவா படம் ஒளிபரப்பாக இருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷ செய்தியாக உள்ளது.

ப்ரீ புக்கிங்
பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் தான் வசூல் வேட்டை நடத்தும் என்பது இல்லை.
படங்களின் வியாபாரம், ப்ரீ புக்கிங் போன்ற விஷயங்கள் மூலமாகவே கலெக்ஷன் நடக்கும்.
வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் காட்டி வருகிறது. தற்போது முன்பதிவு மூலம் இப்படம் ரூ. 9 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சமரி அதப்பத்து ருத்ரதாண்டவம்! பாகிஸ்தான் அணியை தரைமட்டமாக்கி..இறுதிப்போட்டியில் இலங்கை News Lankasri
பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி: புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை News Lankasri