சூர்யா தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் நடித்து வரும் படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கி வரும் அந்த படத்தில் வரலாற்று பகுதி எப்படி இருக்க போகிறது என ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
பாலிவுட் நடிகை திஷா பாட்னி ஹீரோயினாக இதில் நடித்து வருகிறார்.
ரிலீஸ் தேதி
கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. படம் அடுத்த வருடம் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறதாம்.
ரம்ஜான், தமிழ் வருட பிறப்பு என தொடர் விடுமுறைகள் வருவதனால் அந்த தேதியை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது.
ஷங்கரின் இந்தியன் 2 படமும் அதே தேதியில் வரலாம் என்பதால் பாக்ஸ் ஆபிசில் பெரிய போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
You May Like This Video