சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் மோதும் சூர்யா.. கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பாட்னி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தில் வரலாற்று காட்சிகள் மட்டுமின்றி தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் காட்சிகள் என இரண்டுமே இருக்கும் வகையில் கதை இருப்பதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது.
தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

சூப்பர் ஸ்டாருடன் மோதல்
கங்குவா படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் உடன் சூர்யா மோதுவதால் பாக்ஸ் ஆபிசில் ஜெயிக்கப்போவது யார் என்பது பற்றி எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருக்கிறது.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri