மெய்யழகன் படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருக்கு கார் பரிசளித்த சூர்யா, கார்த்தி
மெய்யழகன்
சென்ற ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த ஆகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது மெய்யழகன்.
இப்படி ஒரு படம் பண்ணமுடியுமா என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார், படத்தின் இயக்குநர் பிரேம் குமார். 96 திரைப்படத்தை தொடர்ந்து மெய்யழகன் எனும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார்.
இப்படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் சூர்யாவின் 2டி entertainment நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.
பரிசு
படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் பிரேம் குமாருக்கு சர்ப்ரைஸாக கார் ஒன்றை சூர்யா, கார்த்தி பரிசாக வழங்கியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதோ நீங்களே பாருங்க..
Producer Suriya & Karthi gifted a brand new car to #Meiyazhagan director Prem Kumar 🔥 pic.twitter.com/BkCTGHqRDq
— Kolly Corner (@kollycorner) May 10, 2025

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
