தொலைக்காட்சியில் மாஸ் வெற்றிப்பெற்ற சூர்யாவின் கருப்பு... தீபாவளி ஸ்பெஷல், எந்த டிவி தெரியுமா?
கருப்பு படம்
2026, தமிழ் சினிமாவில் சூர்யாவிற்கு இந்த வருடம் மிகப்பெரிய வெற்றி ஆண்டாக அமைந்துவிட்டது.
முதலில் கருப்பு அடுத்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம், விரைவில் சீன் படமும் வெளியாக உள்ளது. இந்த 3 படங்களில் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட திரைப்படம் தான் கருப்பு.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, சிவதா, நட்டி நட்ராஜ் ஆகியோர் நடிக்க உருவான இந்த கருப்பு திரைப்படம் கடந்த மே 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
முக்கியமான விஷயத்தை பற்றி பேசிய இப்படத்தில் கருப்பு சாமியை முக்கியமாக வைத்து கதை நகர மாஸ் வெற்றியடைந்தது. சூர்யாவின் திரைப்பபயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக கருப்பு அமைய ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தீபாவளி
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அதாவது வரும் நவம்பர் 8ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக மதியம் 12.30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளதாம்.
