பொங்கல் ரேஸில் விஜய், சிவகார்த்திகேயன்.. சூர்யாவின் கருப்பு எப்போ ரிலீஸ் தெரியுமா
ஜனநாயகன் - பராசக்தி
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் 2026 ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் மாபெரும் எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவாகியுள்ளது.
2026 பொங்கல் ரேஸில் பராசக்தி படமும் வரும் என ஏற்கனவே பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அதை உறுதி செய்தனர். பராசக்தி 2026 ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது.
கருப்பு
2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூர்யாவின் கருப்பு படமும் வெளிவரும் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கருப்பு திரைப்படத்தை 2026 ஏப்ரல் 14, அதாவது அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்களாம்.
தளபதி விஜய்யின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களை தவிர வேறு எந்த படங்களாவது இனி பொங்கல் ரேஸில் இணையுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.