அதிரடியாக வந்த சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் மாஸ் அப்டேட்... ரெடியான பேன்ஸ்
கருப்பு படம்
நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ, இப்படம் செம சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
அப்படத்தை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஆக்ஷன் அதிரடி கதைக்களத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யாவுடன் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சூர்யா வழக்கறிஞராக நடிக்கும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தான் இசையமைக்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முதலில் முடிவு செய்துள்ளனர், ஆனால் VFX போன்ற பணிகளால் படம் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
புதிய அப்டேட்
படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் கருப்பு படத்தின் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. அதாவது வரும் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக கருப்பு படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாம்.