தமிழ்நாட்டில் 10 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
கருப்பு
தலைவர் தம்பி தலைமையில், வித் லவ், தாய் கிழவி, யூத் ஆகிய திரைப்படங்கள் இதுவரை 2026ஆம் ஆண்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.

இதை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள கருப்பு திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் 2026ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.
தமிழக வசூல் விவரம்
உலகளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி கருப்பு திரைப்படம் வசூலில் வேட்டையாடி வருகிறது. இந்த நிலையில், 10 நாட்களில் தமிழ்நாட்டில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தகவலின்படி, கருப்பு திரைப்படம் 10 நாட்களில் தமிழகத்தில் ரூ. 124 கோடி வசூலித்துள்ளது. விரைவில் ரூ. 150 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.