விஜய், அஜித்தால் கூட முடியவில்லை.. ஆனால், அதை செய்து காட்டிய சூர்யா.. கருப்பு படத்தின் ப்ரீ பிசினஸ்
கருப்பு
சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் கருப்பு திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் திரிஷா, சுவாசிகா, அனாகா ரவி, ஷிவதா என பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த டீசர் மற்றும் முதல் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறார்கள்.

ப்ரீ பிசினஸ்
இந்த நிலையில், கருப்பு படத்தின் ப்ரீ பிசினஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு ஜீ நிறுவனம் வாங்கியுள்ளது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக விலைக்கு விற்பனையான படமும் இதுவே என கூறுகின்றனர்.

இந்த ஆண்டு அதிக வசூல் செய்த அஜித்தின் குட் பேட் அக்லி, அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள விஜய்யின் ஜனநாயகன் ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமை கூட இன்னும் விற்பனை ஆகாத நிலையில், சூர்யாவின் கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.