ரீ-ரிலீஸ் ஆன சூர்யாவின் மௌனம் பேசியதே திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா?
ரீ-ரிலீஸ்
தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகர்களின் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் ஆகும் டிரெண்ட் இருந்து வருகிறது.
டாப் நடிகர்களின் படங்கள் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் ஆகி வருகிறது.
இதுவரை ரஜினியின் பாட்ஷா, பாபா, படையப்பா, கமல்ஹாசனின் நாயகன், வேட்டையாடு விளையாடு, விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன், விஜய்யின் கில்லி, சச்சின், சூர்யாவின் வாரணம் ஆயிரம், அஞ்சான், தனுஷின் யாரடி நீ மோகினி, சேரனின் ஆட்டோகிராப் உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு வந்தன.

மௌனம் பேசியதே
இப்போது 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற மௌனம் பேசியதே படம் வெளியாகி இருந்தது.

2002ம் ஆண்டு அமீர் இயக்க சூர்யா, த்ரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பலரும் நடித்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி 13ம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
இதுவரை படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 40 லட்சம் வரை வசூல் சாதனை செய்துள்ளதாம்.
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan