சூர்யாவின் வாடிவாசல் படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த ஜீ.வி.பிரகாஷ்.. சம்பவம் வெயிட்டிங்
வாடிவாசல்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் முதல் முறையாக உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல்.
ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நிலையிலும், படப்பிடிப்பு துவங்க சற்று தாமதமாகிவிட்டது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்கின்றனர். VFX காட்சிகளுக்கான முன் தயாரிப்பு பணிகளும் வெளிநாட்டில் நடைபெற்று வருகிறதாம்.
மேலும், படத்தில் உண்மையான காளையுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக, அதற்கான பயிற்சியிலும் சூர்யா ஈடுபட்டுள்ளார்.
மாஸ் அப்டேட்
இந்நிலையில், ஜீ.வி.பிரகாஷ் இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, வாடிவாசல் படத்திற்கான இசையமைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக ஜீ.வி.பிரகாஷ் புகைப்படம் ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
#Vaadivaasal song composing has started . ✨ @theVcreations @Suriya_offl pic.twitter.com/squZGM0dyz
— G.V.Prakash Kumar (@gvprakash) March 7, 2025