நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிறந்த திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகளில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற ட்ரெண்டை மாற்றிய பெருமை சூர்யாவிற்கே சேரும்.
அப்படியான டாப் நடிகரான சூர்யா நடிப்பில் இதுவரை வெளியான சிறந்த திரைப்படங்கள் குறித்த பட்டியலை தான் தற்போது பார்க்கவுள்ளோம்.
நந்தா
இயக்குனர் பாலா - நடிகர் சூர்யா கூட்டணியில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நந்தா, சூர்யாவிற்கு பெரிய வெற்றியடைந்த திரைப்படங்கள் ஏதும் இல்லாமல் இருந்தது. அப்படியான நிலையில் தான் இந்த நந்தா திரைப்படம் வெளியாகி செம ஹிட்டானது. சூர்யா இதுவரை இல்லாத வித்தியாசமான நடிப்பில் வெளியான நந்தா திரைப்படம் அனைவரையும் கவர்ந்தது என்றே கூறலாம். சூர்யாவின் திரைப்பயணத்தில் சிறந்த திரைப்படங்கள் என எடுத்து பார்த்தால் நந்தா திரைப்படம் டாப்பாக இருக்கும். அப்போது வெளியாகி சிறந்த விமர்சனங்களை பெற்ற இப்படத்திற்காக சூர்யா, பாலா இருவரும் விருதுகளை குவித்தனர்.
காக்க காக்க
சூர்யா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் காக்க காக்க. சிட்டியில் பல குற்றங்களை செய்து வரும் பாண்டியா மற்றும் அவரின் கேங்கை அன்புச்செல்வன் தனது தனிப்படையின் மூலம் எப்படி பிடிக்கிறார் மற்றும் இதனால் அவருக்கு ஏற்படும் இழப்புகள் என்பதே காக்க காக்க படத்தின் கதை. முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலில் எடுக்கப்பட்ட காக்க காக்க திரைப்படம் அனைவருக்கும் பிடித்த சூர்யா திரைப்படம் என்பதில் சந்தேகமே இல்லை.
கஜினி
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சூர்யா கூட்டணியில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கஜினி. மறதி நோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரமாக சூர்யாவின் நடிப்பு அனைவரையும் ஆச்சார்ய படுத்தியது. அவரின் அந்த சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தை இன்றும் கூட யாராலும் மறந்திட முடியாது. முருகதாஸின் விறுவிறுப்பான கதைக்களத்தை கொண்ட கஜினி திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் வெளியான சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அயன்
தமிழ் சினிமாவின் சிறந்த கமர்சியல் திரைப்படங்களில் ஒன்று அயன், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2009 ஆண்டு வெளியான திரைப்படம் அயன். புத்திசாலித்தனமான கதைக்களத்துடன் அனைவரையும் ஆச்சார்ய படுத்திய அயன் திரைப்படம் செம வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது இந்த அயன் திரைப்படம். அப்படியான சிறந்த படமான அயன் நிச்சயம் சூர்யாவின் முக்கிய படங்களில் ஒன்று.
சிங்கம்
சூர்யா - ஹரி கூட்டணிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது, அதன்படி இவர்கள் கூட்டணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிங்கம். விறுவிறுப்பான கதைக்களத்துடன் சூர்யாவின் கம்பிரமான கதாபாத்திரத்துடன் வெளியான சிங்கம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. ட்ரெண்ட் செட்டிங் படமாக அமைந்த சிங்கம் படத்தை பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்து இருந்தனர். வசூல் சாதனை படைத்து சூர்யாவின் மார்க்கெட்டை பெரிதாகிய புகழ் சிங்கம் படத்தையே சேரும்.
சூரரை போற்று & ஜெய் பீம்
சூர்யாவின் அடுத்தடுத்த இரண்டு சிறந்த திரைப்படங்கள் நேரடியாக OTT வெளியானது. சூரரை போற்று சூர்யாவிற்கு பெரிய Comeback-ஆக அமைந்தது, வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவான சூரரை போற்று திரைப்படத்தில் சூர்யா மாறா கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். முதன்முறையாக OTT-யில் வெளியாகி பெரிய வெற்றியடைந்த திரைப்படமாக மாறியது சூரரை போற்று.
அதற்கு அடுத்த ஆண்டே சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் வெளியானது, வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக வெளியான இப்படத்திலும் சூர்யா சந்துரு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி சமூக ரிதியான விழிப்பை அனைவரிடமும் கொண்டுவந்தது. அதுவே இப்படத்தின் மிக பெரிய வெற்றியாகும்.
சொந்த ஊரில் புதிய வீடு கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்- வெளிவந்த கலக்கல் புகைப்படங்கள்

10ஆம் வகுப்பு தேர்வில் 6 பாடத்திலும் பெயில் ஆன மாணவன் - கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தினர் IBC Tamilnadu
