சூப்பர் ஹீரோ கதையில் நடிகர் சூர்யா? ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்
நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து, சூர்யா கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் மே 1ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45 படத்தில் நடித்து வருகிறார். இதில் திரிஷா தான் ஹீரோயினாக நடிக்கிறார். அதன் பின், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.
ஹேப்பி நியூஸ்
இந்நிலையில், இப்படங்களுக்கு பிறகு அடுத்து சூர்யா ஒரு சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, மலையாள சினிமாவில் இயக்குனராகவும் பிரபல நடிகராகவும் வலம் வருபவர் பசில் ஜோசப். இவர் கோதா, மின்னல் முரளி போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.

இவர் நடிகர் சூர்யாவிடம் இது தொடர்பான கதையை கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது, இந்த படம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan