வாடிவாசல் நிலை என்ன?.. விடுதலை பட நடிகர் கொடுத்த வெறித்தனமான அப்டேட்
சூர்யா
சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44 - வது படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்திற்கு 'ரெட்ரோ' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியானது.
தற்போது, சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவரது 45 - வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்ற படத்தில் நடிக்க கமிட்டானார். படத்தின் டெஸ்ட் ஷூட்டும் நடந்து முடிந்தது.
அதன் பின், படம் குறித்த அப்டேட் எதுவும் வெளிவரவில்லை. இதனால் படம் ட்ராப்பாகிவிட்டதாக தகவல் உலா வர தொடங்கியது.
இந்நிலையில், தற்போது, வாடிவாசல் படம் குறித்து இயக்குனரும், நடிகருமான தமிழரசன் ஒரு மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.
வெறித்தனமான அப்டேட்
அதில், "வாடிவாசல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருக்க சொல்லி வெற்றிமாறன் சார் என்னிடம் கூறினார்.
தற்போது, நான் கார்த்தியை வைத்து எடுக்கும் படத்தின் தேதி மற்றும் வாடிவாசல் படத்தின் தேதி இரண்டுக்கும் பிரச்சனை வராது என்று நம்புகிறேன்" என கூறியுள்ளார். இதனால், வாடிவாசல் படம் ட்ராப் ஆகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
