சூர்யாவின் அடுத்த படம்.. சென்சேஷன் இயக்குனருடன் கூட்டணி! யார் பாருங்க
நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் எல்லோரும் கங்குவா படத்தின் ரிலீசுக்காக தான் காத்திருக்கிறார்கள்.
அதன் ஷூட்டிங் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அது மட்டுமின்றி வெற்றிமாறனின் வாடிவாசல் படமும் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை 2 படத்திற்கு பிறகு தான் அந்த படம் தொடங்குமா இல்லையா என்பது தெரியவரும்.

சென்சேஷன் இயக்குனருடன் கூட்டணி
இந்நிலையில் சூர்யா தற்போது விலங்கு வெப் சீரிஸ் புகழ் இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு புது படத்தில் நடிக்க இருப்பதாக அப்டேட் வந்திருக்கிறது.
சூர்யா தனது 2டி நிறுவனம் மூலமாக அந்த படத்தை தயாரிக்கப்போகிறார் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri