சூர்யா - பாலா படம் பற்றி கசிந்த தகவல்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இயக்குனர் பாலா மற்றும் சூர்யா இருவரும் 18 வருடங்களுக்கு பிறகு தற்போது கூட்டணி சேர்ந்து இருக்கின்றனர். அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சூர்யா41
சூர்யா41 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரியில் சமீபத்தில் தொடங்கியது. மீனவ சமுதாயம் பற்றிய கதை என்பதால் அதற்காக ஒரு தனி கிராமம் செட் போடப்பட்டு இருக்கிறது. அங்கு ஒரு மாதத்திற்கும் மேல் ஷூட்டிங் நடக்கும், அடுத்து மதுரையில் ஷூட்டிங் நடந்த இருக்கின்றனர்.
படத்தில் சூர்யா இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என ஆரம்பத்தில் இருந்தே தகவல் பரவி வருகிறது. அதில் ஒன்றில் அவர் காது கேட்காத, வாய் பேச முடியாத நபராக தான் நடித்து இருக்கிறார் என சொல்லப்பட்டது.

ஒரே ரோல் தான்
ஆனால் தற்போது அந்த செய்தி துளியும் உண்மை இல்லை என தெரியவந்திருக்கிறது. சூர்யா படத்தில் ஒரே ஒரு ரோல் தான் நடிக்கிறாராம். ஆனால் அது வாய், காது குறைபாடு கொண்ட கதாபாத்திரமா என்பது பற்றி தகவல் இல்லை.
சூர்யாவுக்கு டபுள் ரோல் என பரவிய வதந்திக்கு இதன் மூலமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட 90களின் நாயகி- செம வைரல்