கருப்பு பார்த்து தியேட்டரில் சாமி ஆடும் நபர்கள்.. சூர்யா வைத்த வேண்டுகோள்

By Parthiban A May 18, 2026 04:13 PM GMT
Report

சூர்யாவின் கருப்பு படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. பல தடைகளை தாண்டி படம் திரைக்கு வந்திருக்கும் நிலையில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

மூன்று நாட்களில் 147 கோடி ரூபாய் வசூல் வந்திருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

படத்தை தியேட்டரில் பார்த்து பலர் பரவசத்துடன் சாமி ஆடும் வீடியோக்கள் அதிகம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது பற்றி சூர்யா ஒரு வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

கருப்பு பார்த்து தியேட்டரில் சாமி ஆடும் நபர்கள்.. சூர்யா வைத்த வேண்டுகோள் | Suriya Request To Fans Watching Karuppu

வீடியோ எடுக்காதீங்க..

"கருப்பு திரைப்படத்திற்கு ஏற்பட்ட தடைகளைத் தாண்டி முழு ஆதரவு தந்து, வெற்றிகரமாகத் திரையிட்டுவரும் என் அன்பிற்குரிய திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியீட்டிற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விநியாகஸ்தர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!."

"மேலும், திரையரங்குகளில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைபவர்களுக்கு, உரிய முதலுதவி வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தில் மற்றவர்கள் அதை வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுருத்த அன்போடு வேண்டுகிறேன்."

இவ்வாறு சூர்யா பதிவிட்டு இருக்கிறார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US