சூர்யா இல்லை, ரெட்ரோ பட கதையை முதலில் இவருக்கு தான் எழுதினேன்.. இயக்குநர் உடைத்த ரகசியம்
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யா, கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துவிட்டார். சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
மேலும், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புடன் உருவான இப்படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இவரா?
இந்நிலையில், சமீபத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், "ரெட்ரோ படத்தின் கதையை நான் முதலில் ரஜினி சாரை மனதில் வைத்து தான் எழுதினேன்.
ரஜினி சாருக்காக இந்த கதையை எழுதிய போது இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் கதையாக இருந்தது. ஆனால், அதன் பின் ஆக்ஷன் கதையை சற்று மாற்றி காதல் கதையாக சூர்யா சாரிடம் சொன்னேன்" என்று தெரிவித்துள்ளார்.

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
