கங்குவா என்றால் இது தான் அர்த்தமா? சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்
சூர்யா42
சூர்யாவின் 42வது படமாக உருவாகி வந்த படத்தின் டைட்டில் இன்று காலை அறிவிக்கப்பட்டது. கங்குவா என இயக்குனர் சிறுத்தை சிவா பெயரிட்டு இருக்கிறார்.
டைட்டில் ஏற்கனவே லீக் ஆகி இருந்தாலும், ரசிகர்களுக்காக ஒரு அனிமேஷன் வீடியோவையும் வெளியிட்டு இருந்தது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்.
இது தான் அர்த்தமா ?
தற்போது கங்குவா என்றால் என்ன அர்த்தம் என்று தான் சூர்யா ரசிகர்கள் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போன்ற ஒரு பெயரில் ரஜினியின் ஒரு படமும் முன்பு வந்திருக்கிறது என்பதும் ட்விட்டரில் பேசுபொருளானது.
இந்நிலையில் கங்குவா என்றால் நெருப்பு பவர் கொண்டிருக்கும் நபர் என்று அர்த்தம் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் சூர்யா கதாப்பாத்திரம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானல் பகுதிகளில் நடந்து வருகின்றது.