வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யா வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jul 18, 2022 09:50 AM GMT
Report

வாடிவாசல்

வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அங்கிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலானது.

வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யா வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Suriya Salary For Vaadivaasal Movie

மேலும், இப்படம் இன்னும் சில மாதங்களால் துவங்கும் என எண்ணிய நிலையில் தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இன்னும் ஒரு வருடத்திற்கும் மேலாவது ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

காரணம், சூர்யாவின் கைவசம் உள்ள படங்கள் தான் என்றும், அதில் சில படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா முடிவெடுத்துள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.

வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யா வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Suriya Salary For Vaadivaasal Movie

சூர்யா வாங்கியுள்ள சம்பளம்

அதே போல் மறுபுறம் இயக்குனர் வெற்றிமாறனுக்கு தன்னுடைய விடுதலை படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி வேளைகளில் பிசியாக இருப்பதால், கண்டிப்பாக வாடிவாசல் படத்தை இயக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், வாடிவாசல் படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் சூர்யா ரூ. 28 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US