சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது.. நடிகர் சூர்யா பாராட்டு

suriya arya pa.ranjith sarpatta parambarai pasupathi
By Kathick Jul 29, 2021 10:40 AM GMT
Report

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து, பசுபதி, கலையரசன், John Kokken, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அமேசான் பிரைமில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.

இப்படம் ரிலீசான நேரத்தில் இருந்து, பல திரையுலக பிரபலங்கள் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர் சூர்யாவும் இப்படத்தை பாராட்டி டுவிட் செய்துள்ளார்.

இதில் " சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையை கண்முன்நிறுத்துகிறது. வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது.. வாழ்த்துகள் " என தெரிவித்துள்ளார்.

 சார்பட்டா பரம்பரை படம் குறித்து நடிகர் சூர்யா செய்துள்ள இந்த டுவிட் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US