பட்ஜெட்டை விட பல மடங்கு லாபம் கொடுத்த சூர்யாவின் 'சீன்'.. ரிலீஸுக்கு முன்பே சாதனை
Suriya Scene movie OTT sales record: சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள சீன் திரைப்படத்தின் ஓடிடி விற்பனையின் மூலம் பட்ஜெட்டை விட பல மடங்கு லாபம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.
சீன்
கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என தொடர் வெற்றியை தந்து வரும் சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் சீன். இப்படத்தை மலையாள இயக்குநர் ஜீது மாதவன் இயக்க, நஸ்ரியா, நஸ்லன், ஆனந்த்ராஜ், லால், ராஜ் ப்ரியன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வருகிற நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு சீன் திரைப்படம் வெளியாகிறது.
பிசினஸ்
ஒவ்வொரு பெரிய திரைப்படம் வெளிவரும்போது, அப்படத்தின் பிசினஸ் குறித்த தகவல் வெளிவரும். ஓடிடி, சாட்டிலைட், திரையரங்க உரிமை உள்ளிட்ட விஷயங்கள் எவ்வளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை திரை வட்டாரத்தில் பேசுவார்கள்.

இந்த நிலையில், சீன் திரைப்படத்தின் ஓடிடி பிசினஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 88 கோடிக்கு வாங்கியுள்ளது என கூறப்படுகிறது. சீன் திரைப்படத்தின் பட்ஜெட் ரூ. 30 கோடியாம். இதில் சூர்யாவின் சம்பளம் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியிருக்க, இப்படத்தின் பட்ஜெட் ரூ. 30 கோடி என்றால், ஓடிடி பிசினஸ் மூலமாகவே மூன்று மடங்கு லாபம் கிடைத்துள்ளது. இது சீன் திரைப்படம் ரிலீஸுக்கு மும்பே செய்துள்ள மாபெரும் சாதனை ஆகும்.
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்தளிக்கும் முதல்வர் விஜய் IBC Tamilnadu
இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் தமிழகத்தில் தான் உள்ளது.., எது தெரியுமா? News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan