பெரிய தொகைக்கு விலைபோன நடிகர் சூர்யாவின் சீன் திரைப்பட ஓடிடி ரிலீஸ்...
சீன் படம்
2026, நடிகர் சூர்யாவின் வருடமாக அமைந்துவிட்டது.
கடந்த வருடங்களில் வெளியான படங்களில் சரியான வெற்றியை காணாத சூர்யா இந்த வருடத்தில் சொல்ல முடியாத அளவிற்கு வெற்றிகளை கண்டுள்ளார்.
கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இப்போது சீன் என 3 படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். படங்கள் வெற்றியை தாண்டி தனது குடும்ப வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்துள்ளது.

அதாவது சூர்யா-ஜோதிகாவின் 20வது வருட திருமண நாளை மீண்டும் குழந்தைகள், குடும்பத்தினர் முன் திருமணம் செய்து கொண்டாடினார்கள். அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாக சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.

ஒடிடி ரிலீஸ்
ஜித்து மாதவன் இயக்க சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் என பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் கடந்த நவம்பர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. தற்போது இப்படத்தின் டிஜிட்டர் ஸ்ட்ரீமிங் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாம்.
சீன் திரைப்படத்தின் டிஜிட்டர் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமாக நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ரூ. 88 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி இப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri