மீண்டும் சூரரை போற்று கூட்டணி அமைகிறதா.. வெளிவந்த புதிய செய்தி
மீண்டும் அமைகிறதா சூரரை போற்று கூட்டணி
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளிவந்த திரைப்படம் சூரரை போற்று. உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவான இப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.
இதன் காரணமாக தற்போது சூரரை போற்று திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஹீரோவாக அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போவதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளிவந்தது.
மேலும், இப்படத்தில் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்றும் தகவல் கூறப்பட்டது. பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படத்தில் நடித்துமுடித்த கையோடு, அடுத்ததாக சுதா கொங்கரா படத்தில் தான், சூர்யா நடிக்கப்போகிறார் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், அது உண்மை இல்லை என தெரியவந்துள்ளது. ஆம், பாலா படத்தை முடித்த கையோடு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்குகிறதாம்.
இப்படம் முடிந்த பிறகு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால், இன்னும் சில வருடங்களுக்கு சுதா கொங்கரா - சூர்யா கூட்டணி அமைவது கடினம் தான்..

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
