ட்ராப் ஆனதா சூர்யா - சுதா கொங்கராவின் 'புறநானூறு' ? சூர்யா தரப்பில் இருந்து வந்த அறிக்கை
சூர்யா மற்றும் சுதா கொங்கரா இருவரும் சூரரைப் போற்று படத்திற்காக முன்பு கூட்டணி சேர்ந்து இருந்த நிலையில் மீண்டும் சூர்யா 43 படத்திற்காக இணைவதாக அறிவித்தனர்.
அந்த படத்திற்கு புறநானூறு என டைட்டிலும் அறிவிக்கப்பட்டது. ஆனால் நீண்ட காலம் ஆகியும் படம் தொடங்கப்படமால் இருந்ததால் படம் ட்ராப் ஆகிவிட்டதா என்கிற குழப்பம் எழுந்தது.
சூர்யா அறிக்கை
இந்நிலையில் சூர்யா ஒரு அறிக்கையை தற்போது வெளியிட்டு இருக்கிறார். "புறநானூறு படத்திற்காக இன்னும் நேரம் தேவைப்படுகிறது. இந்த கூட்டணி ரொம்ப ஸ்பெஷல் ஆனது, இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. எங்களது பெஸ்ட் கொடுக்க விரும்புகிறோம். விரைவில் இந்த படத்தை தொடங்குவோம்" என சூர்யா குறிப்பிட்டு இருக்கிறார்.
சூர்யாவின் இந்த பதிவை பார்த்தால் படம் டிராப் ஆகவே அதிகம் வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு முன் வணங்கான் படத்திற்கும் சூர்யா முதலில் பாசிட்டிவ் ஆன அறிக்கைகள் வெளியிட்டார். ஆனால் இறுதியில் படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து ஷாக் கொடுத்த்தார்.
சூர்யாவின் அறிக்கைப்படி, புறநானூறு படம் எப்போது தொடங்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.