தம்பி கார்த்தியை பார்த்து பொறாமையா இருக்கும்.. மேடையில் சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்
சூர்யா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து இருக்கும் படம் கங்குவா. அடுத்த மாதம் 14 - ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆவதால் ப்ரோமோஷன் பணிகளை தற்போதே படக்குழு தொடங்கி இருக்கிறது.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்களான பாபி தியோல், திஷா பாடானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் டெல்லி, மும்பை போன்ற இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சூர்யா பேட்டி
இந்நிலையில், ஐதராபாத்தில் கங்குவா பட பிரமோஷன்களில் ஈடுபட்ட சூர்யா, இயக்குநர் சிவா ஆகியோர் முன்னதாக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நாகார்ஜுனாவுடன் சூர்யா பேசியுள்ளார், அப்போது, நாகார்ஜுனா சூர்யாவிடம் தெலுங்கில் பேசுமாறு கேட்டுள்ளார்.
அதற்கு சூர்யா " நான் fully loaded edition இல்லை limited edition தான். என்னை விட என் தம்பி கார்த்தி நன்றாக தெலுங்கு பேசுவார். அவருடன் பணியாற்றும் தெலுங்கு நடிகர்களுடன் நன்றாக தெலுங்கு மொழிகளில் பேசுவார். இந்த விஷயத்தில் நான் என் தம்பியை பார்த்து பொறாமை படுகிறேன்" என்றும் கூறியுள்ளார்.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
