நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. பிரமாண்டமாக உருவாகவிருக்கும் திரைப்படம்

ravikumar suriya
By Kathick Aug 13, 2021 01:10 PM GMT
Report

நடிகர் சூர்யா தற்போது பாண்டியராஜ் இயக்கி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார்.

இதன்பின் வெற்றிமாறன் இயக்கவிருக்கும், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்று தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இதனை தொடர்ந்து, ரவிக்குமார் இயக்கத்தில் Sci-Fi கதைக்களத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ரவிக்குமார் இதற்கு முன், இன்று நேற்று நாளை படத்தை இயக்கியுள்ளார். மேலும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தையும் இயக்கி வருகிறார்.

அதே போல் நடிகர் சூர்யாவும் இதற்கு முன், 24 எனும் Sci-Fi கதைக்களம் கொண்ட படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவிக்குமார் மற்றும் சூர்யா இணையவிருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US