ரஜினிக்கு சொன்ன கதையில் இப்போது சூர்யா.. பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநருடன் கூட்டணி

By Kathick Feb 18, 2026 04:30 AM GMT
Report

சூர்யா

கருப்பு, சூர்யா 46 & 47 என தொடர்ந்து மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார் சூர்யா. இதில் கருப்பு திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. தமிழக தேர்தல் முடிந்தபின் இப்படம் வெளிவரும் என படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு சொன்ன கதையில் இப்போது சூர்யா.. பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநருடன் கூட்டணி | Suriya To Join Hands With Ashwath Marimuthu

சூர்யா 46 மற்றும் 47 ஆகிய படங்களின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூர்யா 47 படத்தில் நடிகர் சூர்யா மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ரீ-ரிலீஸாகும் கில்லி படம் ப்ரீ புக்கிங்கில் செய்து வரும் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

ரீ-ரிலீஸாகும் கில்லி படம் ப்ரீ புக்கிங்கில் செய்து வரும் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

அஸ்வத் மாரிமுத்து - சூர்யா

இந்நிலையில், சூர்யா அடுத்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வத் மாரிமுத்து தற்போது சிம்புவை வைத்து GOD Of Love என்கிற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவந்த நிலையில், முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினிக்கு சொன்ன கதையில் இப்போது சூர்யா.. பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநருடன் கூட்டணி | Suriya To Join Hands With Ashwath Marimuthu

இதற்கிடையில் ரஜினியிடம் ஒரு கதை கூறியிருந்தார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. கதை பிடித்திருந்தாலும் ரஜினி - அஸ்வத் மாரிமுத்து இணையும் படம் டேக்ஆப் ஆகவில்லை. இந்த நிலையில், ரஜினிக்கு சொன்ன கதையை தற்போது சூர்யாவிடம் கூறி ஓகே செய்துள்ளாராம் அஸ்வத்.

ரஜினிக்கு சொன்ன கதையில் இப்போது சூர்யா.. பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநருடன் கூட்டணி | Suriya To Join Hands With Ashwath Marimuthu

இது கமர்ஷியல் என்டர்டெய்னிங் படமாக, அயன் படத்தில் இருக்கும் வைப் இப்படத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இது தற்போது திரை வட்டாரத்தில் உலா வரும் தகவல் மட்டும்தான், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கடந்த ஆண்டு டிராகன் எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US