சென்சேஷன் நடிகையுடன் முதன் முறையாக ஜோடி சேரும் சூர்யா.. கார்த்திக் சுப்புராஜ் சம்பவம் உறுதி
கங்குவா
சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை.
இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் கதாநாயகியாக திஷா பாட்னி நடிக்கிறார் என்பதை அறிவோம். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமும் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 44
கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா கமிட் செய்துள்ள திரைப்படம் சூர்யா 44. இப்படத்தை கார்த்திக் சுப்ராஜ் இயக்குகிறார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் தான் இப்படம் உருவாகுகிறது என கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர்.
சென்சேஷன் நடிகை
இந்த நிலையில், சூர்யா 44 திரைப்படத்தின் கதாநாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரபல சென்சேஷனல் நடிகை பூஜா ஹெக்டே கமிட் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வரும் நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
தமிழில் முகமூடி மற்றும் பீஸ்ட் என இரு திரைப்படங்களில் மட்டுமே நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். சூர்யா 44 திரைப்படத்தில் கமிட்டானால் பூஜாவின் 3வது தமிழ் திரைப்படமாக இப்படம் அமையும்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
