விஜய் மகனுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா.. அவர் கொடுத்த பதிலை பாருங்க
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்த சமயத்தில் முழு நேர அரசியலில் குதித்தார். தேர்தலில் ஜெயித்து தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நேரத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவர் இயக்கி இருக்கும் சிக்மா படம் நாளை திரைக்கு வருகிறது.

சூர்யா வாழ்த்து
இந்நிலையில் நடிகர் சூர்யா சஞ்சய்க்கு வாழ்த்து சொல்லி X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
"உங்கள் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய்.. சஞ்சய் இப்போது ஒரு இயக்குனர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நாளை மிகப்பெரிய நாள். வாழ்த்துக்கள். பட குழுவினருக்கும் வாழ்த்துக்கள்" என சூர்யா பதிவிட்டு இருக்கிறார்.
அதற்கு பதில் கொடுத்த ஜேசன் சஞ்சய், "ஊக்கமளிக்கும் வார்த்தைகளை சொன்னதற்காக நன்றி சார். இது எனக்கு இன்னும் பலம் மற்றும் உத்வேகத்தை இது அளிக்கிறது.
ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைக்க வைக்கிறது. லவ் யூ சார்" என ஜேசன் சஞ்சய் பதிவிட்டு இருக்கிறார்.
Thank you so much for your incredibly encouraging words, sir. They truly mean a lot to me and give me even more strength and motivation to push myself and do better with every opportunity. It means more than I can express. Love you, sir. ❤️ https://t.co/lPFwCtjST4
— Jason Sanjay Official (@official_jsj) October 1, 2026