சூர்யா 45ல் கோபமாக பேக்அப்.. ஷூட்டிங்கில் என்ன நடந்தது
சூர்யாவின் முந்தைய படமான கங்குவா பெரிய தோல்வி அடைந்த நிலையில் அவரது அடுத்த படங்கள் மீது தான் பெரிய எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.
சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ரெட்ரோ படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
அடுத்து சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோபமாக பேக்அப்
இந்த படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருக்கும் காமெடி நடிகர் கோதண்டம் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் சூர்யா45 ஷூட்டிங் ஸ்பாட்டில் RJ பாலாஜி கோபமாகி ஷூட்டிங்கை திடீரென ரத்து செய்துவிட்டதாக கூறி இருக்கிறார்.
ஒரு நீதிமன்ற காட்சி எடுத்துக்கொண்டிருந்த RJ பாலாஜி அதற்காக 1000 பேர் crowd ஆக நடிக்க வேண்டும் என கேட்டிருந்தாராம். ஆனால் படப்பிடிப்பு தொடங்கியபிறகு அங்கு வெறும் 400 பேர் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அதனால் கோபமாகி ஷூட்டிங் பேக்கப் என சொல்லிவிட்டாராம்.
ஒவ்வொரு காட்சியும் பர்பெக்ட் ஆக இருக்க வேண்டும் என எந்த விஷயத்திலும் பாலாஜி சமரசம் அடைவதில்லை. ஒரு சேர் உடைந்துவிட்டது அடுத்த டேக் எடுக்கும்போது வேறு சேர் போட்டால் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். அதே போன்ற சேர் தான் வேண்டும் என கண்டிப்புடன் சொல்வார், அப்படி தான் படத்தை எடுத்துவருகிறார் என கோதண்டம் தெரிவித்து இருக்கிறார்.