சூர்யவம்சம் திரைப்படத்தில் குட்டி சக்திவேலாக நடித்த இந்த குழந்தையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
சூர்யவம்சம்
விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து 1997ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சூர்யவம்சம். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருந்தனர்.

90ஸ் கிட்ஸ் மனதை தொட்ட இந்த திரைப்படத்தை இன்று வரை தொலைக்காட்சியில் பார்த்து ரசிகர்கள் வருகிறார்கள். சமீபத்தில் கூட இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி செய்து வருவதாக சரத்குமார் தெரிவித்து இருந்தார்.
குட்டி சக்திவேல்
சூர்யவம்சம் திரைப்படத்தில் சின்ராசு மகனாக ஜூனியர் சக்திவேல் ரோலில் நடித்தவர் நடிகை ஹேமலதா. ஆனால் இன்றளவும் அந்த கதாப்பாத்திரத்தில் சிறுவன் என்றே பலரும் நினைப்பதுண்டு.

சிறுமிக்கு சிறுவன் வேடம்போட்டு நடிக்க வைத்துள்ளனர். உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், சேது, காதல் கொண்டேன் உள்ளிட்ட பல படங்களில் ஹேமலதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் ஹேமலதா.
இந்த நிலையில் தற்போது திருமணமாகி கணவர் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தனது கணவர் மற்றும் மகளுடன் ஹேமலதா இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

இந்திய மண்ணில் முதல் முறையாக இயங்கிய ஜப்பான் போர் விமானங்கள் - Veer Guardian 2026 பயிற்சி தொடக்கம் News Lankasri