எலிமினேஷனுக்கு முன் சினேகன் சொன்ன ஒரு வார்த்தை.. கதறி அழுத சுருதி
பிக் பாஸ் ஷோவில் இருந்து சினேகன் இன்று எலிமினேட் செய்யப்பட்டார். அவர் முதல் சீசனில் ரன்னர் ஆக பைனல் வரை வந்த நிலையில் தற்போது அல்டிமேட் ஷோவில் இருந்து பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.
சந்தோசம் தான்
சிம்பு யார் எலிமினேஷன் என அறிவிக்கும் முன்பு சினேகன் உருக்கமாக பேசினார். நான் வெளியில் போனாலும் மகிழ்ச்சியாக தான் போவேன் என கூறினார். சினேகனுக்கு கடந்த வருடம் தான் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணீர் விட்ட சுருதி
கடைசி இருவர் லிஸ்டில் சினேகன் மற்றும் சுருதி இருந்தனர். சுருதி இந்த ஷோவில் தொடர்ந்த இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அவர் எலிமினேட் ஆகாமல் நான் வெளியே போனால் சந்தோசம் தான் என சினேகன் கூறினார்.
இதை கேட்டு சுருதி கண்ணீர் விட தொடங்கிவிட்டார். தாமரை அவருக்கு ஆறுதல் சொன்னார்.
அதன் பின் கார்டை காட்டிய சிம்பு சினேகன் தான் எலிமினேட் ஆனதாக அறிவித்தார்.