சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர் தானா.. இணையத்தில் கசிந்த ரிசல்ட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட நிகழ்ச்சி சர்வைவர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார்.
கடுமையான காடுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து போட்டியாளர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதே இந்த நிகழ்ச்சியில் மையக்கரு.
இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அதில் இரண்டு நபர்கள் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் கலந்து கொள்வர்.
90 நாட்கள் காட்டில் வசித்து, கொடுக்கப்படும் டாஸ்குகளில் வெற்றி பெற்ற ஒரு போட்டியாளருக்கு ரூ. 1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.
தற்போது சர்வைவர் நிகழ்ச்சியின் மொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சர்வைவர் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளர் நடிகை விஜயலட்சுமி என்று இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.