ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் சர்வைவர்.. ரூ. 1 கோடியையும் வெல்லப்போவது யார்
ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு ரூபாய் 1 கோடி மாபெரும் ரொக்கப் பரிசாகக் கிடைக்கும் ~ சென்னை, டிசம்பர் 10, 2021: சர்வைவர் - சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியாகும்; அதனை தமிழில் உருவாக்கும் வாய்ப்பை முதல்முறையாக இந்த ஆண்டு பெற்றதன் மூலம், ஜீ தமிழ் தொலைக்காட்சி உலகம் முழுவதும் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
தமிழக நேயர்களின் ரசனைக்கு ஏற்றபடி மாற்றம் செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஆற்றல்மிக்க பல போட்டியாளர்கள் ஒன்றாகக் களமிறக்கப்பட்டனர். அவர்கள் தங்களது மன மற்றும் உடல் வலிமையை உச்சகட்ட சோதனைக்கு உட்படுத்தியும், கடுமையான சூழலில் சமாளித்து வாழும் ‘சர்வைவல்’ உணர்வுகளையும் வெளிப்படுத்தினர். விக்ராந்த், உமாபதி, ஐஸ்வர்யா, சரண், நந்தா, விஜயலக்ஷ்மி, லக்கி நாராயண், இனிகோ பிரபாகர், வெனஸ்ஸா க்ரூஸ், அம்ஸத் கான், சிருஸ்டி டாங்கே, பெசன்ட் ரவி, பார்வதி விஜே, காயத்திரி ரெட்டி, ராம் சி, லேடி காஷ், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி மற்றும் இந்திரஜா ஷங்கர் உள்ளிட்ட அற்புதமான 18 பிரபலங்கள் ‘சர்வைவர்’ பட்டத்தை வெல்வதற்காக களமிறங்கி மோதினர்.
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உருவெடுத்து, பல்வேறு திருப்பங்களையும், ஆச்சிரியங்களையும் எதிர்கொண்ட போட்டியாளர்கள் அனைவரையும் பரபரப்புடன் சுறுசுறுப்பாக இந்த சீஸன் முழுவதும் வழிநடத்திச்சென்றார். கடந்த 90 நாட்களாக போட்டியாளர்களுடன் இணைந்து, நேயர்களும் ஒரு சுவாரஸ்யமான பயணத்தில் பங்கேற்றனர். இந்நாட்களில், போட்டியாளர்கள் வியப்பூட்டும் வகையிலான தைரியத்தையும், தளராத மன உறுதியையும் வெளிப்படுத்தி, சவாலான இலக்குகளை அடைய போட்டியிட்டும், தங்களுக்கு இருந்த மோசமான பயத்தினை எதிர்கொண்டு வென்றும், ஆள்ளில்லாத ஒரு தீவில் கடும் சூழலை எதிர்கொண்டு வாழ்ந்தனர்.
சர்வைவர் நிகழ்ச்சியின் மாபெரும் இறுதிச்சுற்று, வரும் டிசம்பர் 12, இரவு 9:30 முதல், 11:00 மணிவரை ஒளிபரப்பாகவுள்ளது. கடைசி வரை தாக்குப்பிடித்து வெல்லும் இறுதியான வெற்றியாளர், ‘சர்வைவர்’ என்று முடிசூட்டப்படுவதையும், ரூபாய் 1 கோடியை வென்று தட்டிச்செல்வதைக் காணவும் எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த மெகா இறுதிச்சுற்றை ரசிகர்கள் தவறவிடாமல் காணவேண்டும்.
இதுவரை மேற்கொள்ளப்படாத முயற்சியான, ஜீ தமிழின் பிரம்மாண்ட படைப்பான சர்வைவர் ரியாலிட்டி நிகழ்ச்சியானது 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. எழில்மிகு சான்சிபார் தீவில், ‘காடர்கள்’, மற்றும் ‘வேடர்கள்’ ஆகிய இரண்டு வனவாச அணிகளுக்கு இடையேயான போட்டாப்போட்டியாக துவங்கிய சர்வைவர் நிகழ்ச்சி, ஆரம்பத்திலிருந்தே நேயர்களை இருக்கையின் நுனியில் அமரச்செய்து சுவாரஸ்யத்துடன் ரசிக்க வைத்தது. இரண்டு அணிகளும் தைரியமாக இயற்கையின் கடினமான சூழலை எதிர்கொண்டு, போராட்டத்துடன் தங்கள் சவால்களை சந்தித்தனர்.
வெளிச்சமே இல்லாத இரவுகளையும், பசி நிறைந்த சில பகல் நேரங்களையும் போட்டியாளர்கள் கடக்க வேண்டியிருந்தது; இருப்பினும் திட்டமிட்டபடி, ஒவ்வொரு போட்டியாளர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்த பின்னரே அத்தகைய சூழலுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டனர். புதிய நட்புகள் ஏற்பட்டதையும், அணிகளுக்கிடையே பிளவுகள் ஏற்பட்டதையும், இரண்டு அணிகளுக்கும் சண்டைகள் உருவாகி, பிறகு ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொண்ட நெகிழ்ச்சியான தருணங்களையும் நாம் சர்வைவரில் கண்டோம்.
இருப்பினும், யாரும் எதிர்பாராத விதமாக போட்டியாளர்கள் தங்களது சக போட்டியாளர்களை டிரைபல் பஞ்சாயத்தில் எலிமினேட் செய்தது இந்த சீஸன் முழுவதும் அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. ஆனால், வெளியேற்றப்பட்டப் போட்டியாளர்கள் முற்றிலுமாக நீக்கப்படாமல், ‘மூன்றாம் உலகம்’ என்கிற மிகக் கடுமையான சவால்கள் நிறைந்த சூழலுக்கு அனுப்பப்பட்டார்கள் என்பது, மற்ற போட்டியாளர்களுக்கு தெரியாத வகையில் சுவாரஸ்யமாக மறைக்கப்பட்டது.
வெளியேற்றப்பட்ட அனைத்துப் போட்டியாளர்களும் மிகக் கடினமான இலக்குகளை எட்டுவதற்கு ஒருவரை ஒருவர் எதிர்கொண்டு போட்டியிட்டனர்; அதில் வெற்றிபெற்ற அம்ஸத் கான் மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர், இந்த சீஸனின் பாதியில், பிரதான போட்டியில் பங்கேற்க மீண்டும் தீவிற்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றனர். ஏற்கனவே வெளியேற்றப்பட்டப் போட்டியாளர்கள் களத்திற்கு மீண்டும் திரும்பியதும், இரண்டு அணிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ‘கொம்பர்கள்’ என்னும் ஒரு பெரிய அணி உருவாக்கப்பட்டது. அதன் பிறகு அனைத்து போட்டியாளர்களும் தனித்தனியாக போட்டியிடத் துவங்கினர்.
சீஸன் முழுவதும் நடைபெற்ற ஒவ்வொரு சவால்களின் போதும், வனவாசிகள் பஞ்சாயத்தின் போதும் போட்டியாளர்கள் இதுவரைக் கண்டிராத தடைகளை எதிர்கொண்டனர்; போட்டியின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான அவர்களது போராட்டத்தில் சிலருக்கு காயங்களும், எதிர்பாராத தோல்விகளும் ஏற்பட்டன. நிகழ்ச்சி இறுதிகட்டத்தினை நெருங்கியது குறித்து பேசிய, ZEEL நிறுவனத்தின், ஈவிபி மற்றும் சவுத் க்லஸ்டர் ஹெட் திரு. சிஜூ பிரபாகரன் அவர்கள், “ஜீ தமிழ் தொலைக்காட்சி எப்போதுமே ஒரு புதிய டிரென்டினை உருவாக்கும் தொலைக்காட்சியாக இருப்பதையே இலக்காக கொண்டு செயல்படுகிறதே தவிர, எந்தவொரு டிரென்டையும் பின்பற்றும் விதத்தில் செயல்பட்டதில்லை. நேயர்களுக்கு ஒரு வித்தியாசமான ரியாலிட்டி நிகழ்ச்சி தேவை என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.
எனவே, ‘சர்வதேச அளவில் பிரபலமான சர்வைவர் என்னும் படைப்பை நமது மக்களுக்கு ஏற்ப மாற்றியமைத்து உருவாக்கும் முதல் தமிழ் தொலைக்காட்சியாக நாம் இருக்க வேண்டும்’ என்கிற முடிவை நாங்கள் எடுத்தோம். பல்துறை சார்ந்த போட்டியாளர்களை தேர்வு செய்ததிலிருந்து, நிகழ்ச்சி தயாரிப்பு மதிப்பீடுகள் வரை, அனைத்தும் சவால் நிறைந்த பணியாகவே இருந்தன. கண்கவரும் விதமாக இருந்த போதிலும் சான்சிபார் தீவு கடுமையான சூழல் நிறைந்ததாகவே இருந்தது; நிகழ்ச்சியை வெற்றிகரமான ஒன்றாக உருவாக்க, எங்கள் குழுவினர் மற்றும் நட்சத்திர தொகுப்பாளருமான திரு. அர்ஜுன் அவர்களும் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டோம்.
சர்வைவர் நிகழ்ச்சி, நேயர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு; நமது பிராந்தியத்தில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் போக்கினையே மாற்றியமைத்து குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்! இது நாள் வரை, இப்போதும் நமது போட்டியாளர்கள் ரத்தம், வியர்வை, மற்றும் கண்ணீரைப் பொருட்படுத்தாமல் தங்களது பங்களிப்பினை வழங்கிவருகிறார்கள். கிரான்ட் ஃபினாலே, நாம் மிகப் பிரம்மாண்டமான கடைசிப் போட்டியைக் காண்போம். அதில் வெற்றி பெறுபவர் ‘சோல் சர்வைவர்’ என்னும் தனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, ரூபாய் 1 கோடி ரொக்கப்பரிசையும் பெறுவார்”, என்று தெரிவித்தார்.
இதுவரை நடைபெற்ற மிகமிகக் கடுமையான சவால்களை சமாளித்து வந்தவர்களில், முதல் 5 இடங்களில் – உமாபதி, , சரண், விஜயலக்ஷ்மி, லக்கி நாராயண், மற்றும் வெனஸ்ஸா க்ரூஸ் ஆகிய போட்டியாளர்கள் உள்ளனர். வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களான நந்தா, அம்ஸத் கான், இனிகோ பிரபாகர், ஐஸ்வர்யா மற்றும் விக்ராந்த், ஆகியோர் நடுவர் குழுவினராக அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சியில் அவர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், இறுதிச்சுற்றில் உள்ளவர்களின் எதிர்காலம் இவர்களது கையில் உள்ளது.
நிகழ்ச்சியின் பட்டத்தினை வெல்வதற்காக முழுத் திறனுடன் போட்டியாளர்கள் மோதும் இந்த சூழலில், டிசம்பர் 12, இரவு 9:30 மணி முதல் ஒளிபரப்பாகவுள்ள இறுதிச்சுற்றில் - சர்வைவரில் வெற்றி பெற்று ரூபாய் 1 கோடியை வெல்லப்போகும் போட்டியாளரை ஊக்குவிக்கவும், பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சியைக் காணவும் நேயர்கள் தயாராக உள்ளனர். போட்டியின் பட்டத்தை அடைவதற்காக பல போட்டியாளர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி களத்தில் கடைசியாக ஒருமுறை மோத உள்ளனர்.
வரும் ஞாயிறு, டிசம்பர், 12 இரவு 9:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மற்றும் zee5 OTT தளத்திலும் காணலாம் சர்வைவர் நிகழ்ச்சியின் கிரான்ட் ஃபினாலேவை / இறுதிச்சுற்றைக் காணத் தவறாதீர்கள்.
நிகழ்ச்சியைப் பற்றிய தொடர் தகவல்களுக்கு ஜீ தமிழின் சமூக ஊடக தளங்களை பின்தொடரவும்!