ஜெய் பீம் உட்பட சூர்யாவின் நான்கு திரைப்படங்களும் நேரடியாக OTTயில் ரிலீஸ்!
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் நேரடியாக OTT-யில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சூரரை போற்று.
இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து நேரடியாக OTT தளத்தில் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் சூர்யா நடித்து தயாரித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ள மேலும் மூன்று திரைப்படங்கள் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
1. சசிகுமார் - ஜோதிகா நடித்துள்ள 'உடன்பிறப்பே' (அக்டோபர் ரிலீஸ்)
2. ரம்யா பாண்டியன் நடித்துள்ள 'ரமே ஆண்டாளும் ராவண ஆண்டாளும்' (செப்டம்பர் ரிலீஸ்)
3. அருண்விஜய் தனது மகனுடன் இணைந்து நடித்துள்ள 'Oh My Dog' (டிசம்பர் ரிலீஸ்)
