தங்களின் வாக்குகளை செலுத்திய சூர்யா மற்றும் கார்த்தி ! புகைப்படத்துடன் இதோ..
தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா நட்சத்திரங்களை பொறுத்தவரை கமல், விஜய், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் தங்களின் வாக்குகளை செலுத்தியிருந்தனர்.
இதனிடையே தற்போது நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சென்னை, தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களின் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
மேலும் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவர்களின் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.
#LocalBodyElection | நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். #Suriya | #Karthi pic.twitter.com/cFFn5wCrnC
— Senthilraja R (@SenthilraajaR) February 19, 2022
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan