பாலா - சூர்யா இணையும் படத்தில் கதாநாயகியாக இந்த பாலிவுட் நடிகையா.. சூர்யாவின் அடுத்த அதிரடி
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் சூர்யா.
இவர் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் திரையுலகின் தனித்துவ இயக்குனரான பாலாவுடன் 20 வருடங்கள் கழித்து மீண்டும் தான் இணையப்போவதாக புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார் சூர்யா.
கடந்த 2001-ல் சூர்யாவை வைத்து நந்தா என்னும் படம் இயக்கி சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புனையாக அமைய வழிவகுத்திருந்தார் பாலா.
அதன்பின் மீண்டும் பிதாமகன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்திலும், அவன் இவன் படத்தில் கேமியோவாகவும், பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்தார்.
அதற்கு பிறகு இப்போது தான் பாலா - சூர்யா கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. இந்நிலையில், பெயரிடப்படாத இந்த புதிய படத்தில், நடிகர் வயதான வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பேசப்பட்டு வருகிறது.