முதல்முறையாக இப்படியொரு கதாபாத்திரம் ! பாலா - சூர்யா கூட்டணி திரைப்படம் குறித்து வெளியான தகவல்..
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலரும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும், பாலாவின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வெற்றிமாறன் படத்தை முடித்தபின் தான் சூர்யா பாலாவின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் தற்போது பாலா - சூர்யா திரைப்படம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
அதன்படி இப்படத்தில் சூர்யா முதன்முறையாக Def and Dum (காத்து கேட்காத மற்றும் பேச இயலாத) நபராக நடிக்கவுள்ளாராம். இதற்கு முன் மொழி திரைப்படத்தில் சூர்யாவின் மனைவி ஜோதிகா இது போல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.