முதலிடத்தை பிடித்து நடிகர் சூர்யா.. சாதனை படைத்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபவர் நடிகர் சூர்யா.
இவர் நடிப்பில் தற்போது 'சூர்யா 40' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.
நடிகர் சூர்யாவிற்கு லட்ச கணக்கிலான ரசிகர்கள் பட்டாளம் உள்ளதை நாம் அறிவோம்.
இவருடைய படங்களின் அறிவிப்புகள், பாடல்கள், படங்கள் வெளியாகும் பொழுது, அதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் ஜூலை 23, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் காமன் டிபி - யை வெளியிட்டார்கள். இந்த காமன் டிபி சமூக வலைத்தளத்தில் வைரலானது.
மேலும் #SuriyaBdayCDPCarnival என்ற ஹாஸ்டேக், ரசிகர்களால் பகிரப்பட்டு, இந்திய அளவில் டிரெண்டாகி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
