சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ள பிகில் நட்சத்திரம், யார் தெரியுமா?
சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதனால் ரசிகர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்தனர் என்றே கூறலாம். ஆம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாவது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தற்போது இப்படத்தில் நடித்துள்ள சிறுவயது நட்சத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம், இப்படத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்திருந்த பிரஜூனா சாரா எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தில் நடித்துள்ள வினய்யுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
