மகள் மட்டுமின்றி அம்மாவுக்கும் ஜோடியாக நடிக்கவுள்ள நடிகர் சூர்யா! வெளியான புதிய தகவல்..
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய் பீம் பெரியளவில் பேசப்பட்டு மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக சூர்யா பல வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்படத்தில் சூர்யா மற்றும் அதர்வா நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இரண்டு கதாபாத்திரங்களிலிலும் சூர்யாவே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் ஒரு கதாபாத்திரத்தில் சூர்யா வயதான தோற்றத்தில் நடிப்பதாகவும், அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹேமமாலினியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சூர்யா ஹேமாலினியின் மகளான ஈஷா தியோல் உடன் ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
