சூர்யா நடித்த சூப்பர்ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்த மாதவன்.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகன் சூர்யா. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவட்டன்ஹ ஜெய் பீம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.
இதனை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் அடுத்தாண்டு வெளியாகவுள்ள படம் எதற்கும் துணிந்தவன். இதன்பின் பல படங்கள் சூர்யாவின் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களில், ரசிகர்களால் தற்போது வரை கொண்டாடப்படும் படம் காக்க காக்க.
இப்படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக சூர்யா நடித்திருந்தார்.
ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென கெளதம் மேனனின் முதல் சாய்ஸாக இருந்தது மாதவன் தானாம். பின், சில காரணங்களால் மாதவனால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
மேலும், நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி படத்தில் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.