"இதை நான் மட்டும் தான் பண்ணனுமா?"- தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதில் கூறிய நடிகர் சூர்யா.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளவர் தான் நடிகர் சூர்யா. பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியிடப்பட்டு அனைவரும் கொண்டப்பட்ட படமாக மாறியது.
சூர்யாவின் இந்த அணுகுமுறை பலரும் தங்கள் நடித்த படத்தை OTT-ல் நேரடியாக திரையிட முன்வருவதற்கு காரணமாக அமைந்தது. மேலும் சூரரைப்போற்று பல திரைப்பட விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சூர்யா நடித்து முடித்து நவம்பர் 2-ல் திரைக்கு வர காத்திருக்கும் 'ஜெய் பீம்'.படத்திற்காக நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு பேட்டியளித்திருக்கிறார்.
நேர்காணலின் பொழுது தொகுப்பாளர்,"ஜெய் பீம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் படமாக அமைந்துள்ளது, உங்கள் சொந்த வாழ்வில் நீங்கள் ஏழை எளிய மாணவர்களின் படிப்பிற்கு உதவும் வகையில் தொடங்கப்பட்ட அகரம் இயக்கத்தை போன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்
உதவி செய்யும் வகையில் ஏதேனும் இயக்கத்தை தொடங்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?" என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, "நிச்சயம் நான் செய்வேன் ஆனால் அதை நான் மட்டும் தான் செய்ய வேண்டுமா, ஏன் நீங்கள் எல்லாரும் செய்யக்கூடாதா?" என்று அதிரடியாக பதில் கூறியுள்ளார்.