Kalari பயிற்சி எடுப்பவர்களுடன் பிரபலங்கள் சூர்யா-ஜோதிகா எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ
நடிகர் சூர்யா பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவிற்குள் நுழைந்தவர். அதற்கு முன் ஒரு கார்மென்ட் கம்பெனியில் எல்லாம் பணிபுரிந்திருக்கிறார்.
சினிமாவில் நடிக்க தொடங்கினாலும் சரியான பாதை அவருக்கு கிடைக்கவில்லை, பல தடைகளை தாண்டி தான் இப்போது பெரிய இடத்தை பிடித்துள்ளார். சூர்யா படங்களை தாண்டி பண கஷ்டத்தால் படிப்பை தொடர முடியாது நிறைய மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் செய்து வருகிறார்.
அவரின் அந்த நல்ல எண்ணத்தை பாராட்டாத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
அண்மையில் சூர்யா பழங்குடியின மக்களின் கஷ்டங்களை வெளிப்படுத்தும் வகையில் ஜெய் பீம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
படத்திற்கு சில சமூகத்தினரிடம் இருந்து பிரச்சனைகள் வந்தாலும் மக்களிடம் படம் போய் சேர்ந்துவிட்டது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. Kalari பயிற்சி எடுக்கும் மாணவர்களுடன் இருவரும் புகைப்படம் எடுத்துள்ளனர்.
