பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாலாவுடன் இணையும் சூர்யா ! அவரே வெளியிட்ட பதிவு..
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் அடுத்த மாதம் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
இதனிடையே தற்போது சூர்யா அவரின் ட்விட்டர் பக்கத்தில் தனது அடுத்த திரைப்படம் குறித்து அறிவித்துள்ளார்.
அதில் "என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான், அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன், அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்".
இதனை சூர்யா இயக்குனர் பாலா மற்றும் சிவகுமார் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…
— Suriya Sivakumar (@Suriya_offl) October 28, 2021
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்...
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்… pic.twitter.com/H9wyutZD3h
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri