விஜய்யை விட அதிக சம்பளம், தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வந்த சூர்யா ! எப்போது தெரியுமா?
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய் பீம் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்தது.
இதனிடையே சூர்யா நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சூரரை போற்று திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது. ஆனால் அவர் நடிப்பில் அப்படத்திற்கு முன் வெளியான திரைப்படங்கள் வெற்றியடைய தவறியது.
சில வருடங்களுக்கு முன்பு சூர்யா தான் டாப். ரஜினி, கமலுக்கு பிறகு அதிக சம்பளம் பெரும் நடிகராக சூர்யா தான் இருந்து வந்தார். இவர் நடிப்பில் வருடம் தோறும் வெளியாகும் திரைப்படங்கள் அதிக வசூல் சாதனை செய்து வெற்றியடைந்து வந்தது.
உதாரணமாக கஜினி, ஆறு, வேல், வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் என வரிசையாக அவரின் திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது.
மேலும் சிங்கம் திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யா 15 - 20 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது, அப்போது விஜய் 14 - 16 கோடி வரை சம்பளமும், அஜித் 12 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளனர்.
பின் சில வருடங்கள் கழித்து தற்போது விஜய் - அஜித் தான் சூர்யாவை விட அதிகமாக சம்பளம் பெற்று வருகின்றனர்.


துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
