புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கே சென்று நடிகர் சூர்யா அஞ்சலி ! எமோஷனல் பேட்டி..
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் புனித்ராஜ்குமார், இவர் அங்குள்ள ரசிகர்களால் அப்பு என அன்புடன் அழைக்கப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபொழுது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் புனித். பின் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
மேலும் கடந்த ஞாற்றுக்கிழமை புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் , குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா "இன்னும் ஏத்துக்க முடியல..நான் 4 மாத குழந்தையா இருக்கறப்ப, புனித் 7 மாத குழந்தைனு எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க.. புனித் ராஜ்குமாரை ரொம்ப மிஸ் பண்றோம்" என எமோஷனலாக பேசியுள்ளார்.