விஜய் சேதுபதிக்கு தனது மகள் மீது இவ்வளவு பாசமா... அவரது மகன் சூர்யா பகிர்ந்த விஷயம்
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் மக்கள் செல்வனாக வாழ்ந்து வருகிறார்.
மிகவும் தரமான படங்கள் நடித்து மக்களின் மனதை வென்ற விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் தலைவன் தலைவி படம் வெளியாகி இருந்தது.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி-நித்யா மேனன் நடித்துள்ள இப்படம் ரூ. 75 கோடிக்க மேல் செம வசூல் வேட்டை நடத்தியது.
மகள் பாசம்
விஜய் சேதுபதி சினிமாவில் சாதித்து வர இப்போது அவரின் மகன் சூர்யாவும் நடிக்க வந்துள்ளார்.
அவர் நாயகனாக Phoenix என்ற படத்தில் நடித்துள்ளார். படம் கடந்த ஜுலை 4ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ஒரு பேட்டியில் சூர்யா, தனது அப்பா மற்றும் தங்கை குறித்து பேசியுள்ளார்.
சூர்யா விஜய் சேதுபதி பேசும்போது, ஒரு முறை கோவத்தில் என் தங்கையை அடித்துவிட்டேன். உடனே என் அப்பா எதுக்கு என் பொண்ணை அடிச்சேன்னு கேட்டார்.
அவ தான் முதலில் அடிச்சா சொன்னதுக்கு, அவ அடிச்சா நீ ஏன் அடிக்கிற, அடிச்சா அடி வாங்கிக்கடானு சொன்னார் என கூறியுள்ளார். சூர்யா சொன்னதை கேட்டு ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு மகள் மீது இவ்வளவு பாசமா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.